சவூதி அரேபியாவில் நடப்பு பள்ளி ஆண்டு இறுதி வரை தொலைதூரக் கற்றல் நீட்டிப்பு !!
நடப்பு கல்வியாண்டின் இறுதி வரை தொலைதூரக் கல்வி கற்றலை தொடருவதாக சவுதி அரேபிய அரசு திங்களன்று அறிவித்தது.
சவூதி அரேபியாவில் தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
சவூதியின் கல்வி அமைச்சர் டாக்டர் ஹமத் அல்-ஷேக் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில், இந்த முடிவு அனைத்து மாணவர்கள் மற்றும் கல்வி ஊழியர்களின் ஆரோக்கியத்தை ஆபத்தான கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பதில் தலைமைத்துவத்தின் ஆர்வத்தை உறுதிப்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.
நாட்டில் தொற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்த இந்த மாதம் அரசாங்கம் மேற்கொண்ட புதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இந்த அறிவிப்பு சமீபத்தியதாகும்.
பொது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், வெளிப்புற நிகழ்வுகள் மற்றும் உட்புற உணவருந்தும் நிகழ்வுகள், அத்துடன் சினிமா மற்றும் பிற பொழுதுபோக்கு மையங்களை மூடுவது ஆகியவை இதில் அடங்கும்.

