சவூதி வெளியுறவுத்துறை அமைச்சர் கத்தார் நாட்டின் எமிருடன் தோஹாவில் சந்தித்தார்… சவூதி வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு !
சவூதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் திங்கட்கிழமை கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவுக்கு அலுவலகபூர்வ பணிக்கு வந்துள்ளதாக சவுதி பத்திரிகை நிறுவனம் (Saudi Press Agency) தெரிவித்துள்ளது.
கத்தார் நாட்டின் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி மற்றும் கத்தார் துணை பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி ஆகியோருடன் சவூதி எஃப்.எம் (Saudi FM) பேச்சுவார்த்தை நடத்தியது.
சவுதி வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட ட்வீட்டில், “இவ்வரவேற்பின் போது, இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத் மற்றும் மகுட இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் கத்தார் நாட்டின் எமிருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார் என்று சவுதி வெளியுறவுத்துறை அமைச்சர் கூறினார்” என்று செய்தி வெளியிட்டது.
தோஹா சர்வதேச விமான நிலையத்தில் சவூதி வெளியுறவுத்துறை அமைச்சரை ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி வரவேற்றார்.
கத்தார் உடனான சர்ச்சையை முடிவுக்குக் கொண்டு வந்து ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்து இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஜனவரி மாதம் நடைபெற்ற GCC உச்சி மாநாட்டின் முடிவில் வளைகுடா நாடுகள் AIUIa உடன்படிக்கையில் கையெழுத்திட்டன என்பது குறிப்பிடத்தக்கது.