துபாய் மூத்த காவல்துறை அதிகாரி காலமானார்…காவல்துறையினர் அஞ்சலி !
துபாய் காவல்துறையில் பணியாற்றிய மூத்த அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை காலமானார் என்று துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது.
மேஜர் ஜெனரல் டாக்டர் அல் சலால் சயீத் பின் ஹுவைடி அல் ஃபலசி துபாய் காவல்துறையில் நிர்வாக விவகாரங்களுக்கான உதவி தளபதியாக இருந்தார். இவருடைய மரணம் குறித்து காவல்துறையினர் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
அல்லாஹ் அவருடைய ஆன்மாவை ஆசீர்வதிக்கட்டும் என்றும் அவரின் இழப்பைச் சுமக்க அவருடைய குடும்பத்தினருக்கு வலிமையை கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் பிரார்த்தித்தார்கள்.