ஷார்ஜாவிலிருந்து லக்னோ புறப்பட்ட விமானம் பாகிஸ்தான் கராச்சி விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் !
ஷார்ஜாவிலிருந்து லக்னோ புறப்பட்ட இண்டிகோ விமானம், பயணி ஒருவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவ தேவைக்காக பாகிஸ்தானின் கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் உடனடியாக தரையிறக்கப்பட்டது.
இதைப்பற்றி விமான நிறுவனம் வெளியிட்ட செய்தியில் “ஷார்ஜாவிலிருந்து லக்னோ புறப்பட்ட இண்டிகோ விமானம் 6E 1412 மருத்துவ அவசரம் கருதி கராச்சியில் தரையிறக்கப்பட்டது. எதிர்பாராத நிலையில் பயணி உயிரிழந்துவிட்டதாக விமான நிலைய மருத்துவக் குழு அறிவித்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த பயணியின் உறவினர்கள் மற்றும் அவரது நண்பர்களுக்கு விமான நிறுவனம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.