Friday, October 17, 2025
National

ஷார்ஜா தொழிலாளர்கள் இரு வாரத்திற்கு ஒருமுறை கட்டாய PCR பரிசோதனை மேற்கொள்ள நகராட்சி அறிவிப்பு !

ஷார்ஜாவில் உள்ள உணவகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை கட்டாய PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று நகராட்சி அறிவித்துள்ளது.

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட தொழிலாளர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

உணவகங்களிலும் பிற நிறுவனங்களிலும் உள்ள தொழிலாளர்கள் முழுமையான தடுப்பூசி எடுத்துள்ளார்களா அல்லது நெகடிவ் PCR பரிசோதனை முடிவைக் கொண்டிருக்கிறார்களா என்பதைக் காண்பிக்க ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

அனைத்து உணவகங்களும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக ஷார்ஜா நகராட்சி உணவகங்களுக்கான ஆய்வு வருகைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

உணவகங்களில் உள்ள மேஜைகள் குறைந்தது இரண்டு மீட்டர் இடைவெளியில் வைக்கப்பட வேண்டும். மேலும் ஒரு மேஜையில் நான்கு நபர்களுக்கு மேல் அனுமதிக்கப்படக்கூடாது என்பதும் குறிப்பிடத்தக்கது.