Friday, October 17, 2025
NationalTravel

ஷார்ஜா: இந்தியாவிற்கு பயணம் செய்ய Dh300 மட்டுமே! சிறப்புக் கட்டண சலுகை அறிவித்து ஏர் அரேபியா அசத்தல்!

ஷார்ஜாவை தளமாகக் கொண்ட ஏர் அரேபியா விமான நிறுவனம் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு சிறப்புக் கட்டண சலுகையை அறிவித்துள்ளது. இந்தியாவில் குறிப்பிட்ட சில நகரங்களுக்கு பயணிப்பவர்களுக்கு இச்சலுகை அளிக்கப்படுவதாக ஏர் அரேபியா நிறுவனம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

“ஏர் அரேபியாவுடன் இன்று முன்பதிவு செய்யுங்கள், Dh300 முதல் எங்களுடைய சிறப்பு ஒரு வழி கட்டணங்களுடன் (அனைத்துக் கட்டணம் உட்பட) இந்தியாவுக்கு பயணம் செய்யுங்கள் ” என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

மும்பை செல்ல ஒரு வழி பயண டிக்கெட்டுக்கு Dh300 என்றும், டெல்லிக்கு Dh350 என்றும் நிர்ணயித்துள்ளது. அதே சமயம், சென்னைக்கு செல்பவர்கள் Dh410 செலுத்த வேண்டும் என்றும் கோழிக்கோடு செல்ல டிக்கெட் கட்டணம் Dh325 என்றும் பெங்களூரு பயணிப்பதற்கு Dh390 என்றும் நிர்ணயித்துள்ளது. இவை அனைத்தும் ஒரு வழி பயண கட்டணமாகும்.

இந்திய பயணத்திற்கான வழிகாட்டுதல்களையும் விமான நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.

அனைத்து பயணிகளும் 72 மணி நேரத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட PCR நெகடிவ் ரிசல்ட்டை செக்-இன் நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் நெகடிவ் ரிசல்ட்டை ஏர் சுவிதா போர்ட்டலில் (Air Suvidha portal) பதிவேற்ற வேண்டும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், பயணிகள் தங்களுடைய விமான பயணத்திற்கு முன் ஆரோக்ய சேது (Aarogya Setu) மொபைல் பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் ஏர் சுவிதா போர்ட்டல் மூலம் சுய அறிவிப்பை (Self-Declaration) சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.