Monday, March 2, 2026
Business

துபாய் மாலில் (The Dubai Mall) அக்டோபர் 29 முதல் 31 வரை மூன்று நாட்களுக்கு 90% வரை சிறப்பு தள்ளுபடி !

தி துபாய் மாலில் (The Dubai Mall) மெகா சேல் திருவிழா நடைபெற உள்ளது. இது உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக பார்வையாளர்களை கொண்டுள்ள ரீடெய்ல் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ள இடமாகும். இவ்விற்பனை அக்டோபர் 29 முதல் 31 வரை நடைபெற உள்ளது. இந்த சலுகை விற்பனையில், நூற்றுக்கணக்கான ரீடெய்ல் விற்பனையாளர்கள் விளையாட்டு, சுகாதாரம் மற்றும் ஹெல்த் பிராண்டட் பொருட்களுக்கு 90% வரையும், ஃபேஷன், அழகு சாதன பொருட்கள் ,நகைகள் மற்றும் சிலபொருட்களுக்கு 75% வரையும் தள்ளுபடிவழங்கப்படுகிறது.

இந்த சிறப்பு விற்பனை மூன்று நாட்களும் காலை 10 மணி முதல் நள்ளிரவு வரை நடைபெற உள்ளது. ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை மிச்சப்படுத்தும் டீல்களை ஏறக்குறைய ஒருநாளுக்கு 14 மணிநேரங்கள் வழங்குகிறது.

அக்டோபர் 30 முதல் நவம்பர் 28 வரை நடைபெற உள்ள துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச் என்பது உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்தின் வருடாந்திர கொண்டாட்டமாகும். ஒவ்வொரு நாளும் 30 நிமிட உடற்பயிற்சி நடவடிக்கைகளை தொடர்ந்து 30 நாட்கள்( 30 நிமிடங்கள், 30 நாட்கள்) செய்து முடிப்பதே இந்த ஃபிட்னஸ் சேலஞ்ச் நிகழ்வாகும்.

இந்த ஃபிட்னஸ் சேலஞ்சின் நோக்கம் குடியிருப்பாளர்களை ஆரோக்கியமாக இருக்க ஊக்குவிப்பதுடன், அமீரகத்தை உலகின் மிகச் சுறுசுறுப்பான நாடுகளில் ஒன்றாக மாற்றுவதும் ஆகும். வாடிக்கையாளர்கள் இந்த சலுகை கால விற்பனையின் போது தி துபாய் மால் ஆப் மூலம் எமிரேட்ஸ் ஸ்கைவார்ட் மைல்களை(Emirates Skyward Miles) செலவு செய்து கொள்ளவும் மற்றும் பெறவும் முடியும்.

100 திர்ஹம்ஸ்க்கு மேல் செலவு செய்து பொருள் வாங்குவோர் அந்த ரசீதை ஆப் மூலம் ஸ்கேன் செய்து எமிரேட்ஸ் ஸ்கைவார்ட் மைல் எனப்படும் வெகுமதி நாணயத்தை (reward currency) பெறலாம்.