Friday, October 17, 2025
National

துபாய் வாழ் மக்களே ! 30 நாள் சவாலுக்கு ரெடியா ? அழைப்பு விடுத்த துபாய் பட்டது இளவரசர் !!

துபாய் வாழ் மக்களிடத்தில் சவால் ஒன்றினை விடுத்துள்ளார் துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாக கவுன்சிலின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம்.

“30 நிமிடங்கள், 30 நாட்கள், நீங்கள் எங்கே இருந்தாலும் சரி.. என்ன உடற்பயிற்சி செய்தாலும் சரி, மாற்றத்தை உருவாக்குங்கள், அக்டோபர் 30 – நவம்பர் 28 வரையில் சவாலை ஏற்றுக்கொள்ளுங்கள்” என ஹம்தான் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

சரியான பழக்கவழக்கங்களை நம்முடைய வாழ்வின் அங்கமாக மாற்றிக்கொண்டால் நம்மால் மேம்பட்ட நிலைக்கு எளிதில் மாறுவதற்கான வாய்ப்பு உருவாகும் என ஹம்தான் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இவ்வருடம் முழுவதுமே பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கு DFC (Dubai Fitness Challenge) முக்கியத்துவம் அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து உடற்பயிற்சிகளும் அரசு விதித்துள்ள கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளுக்கு உட்பட்டே நடைபெறும். சமூக இடைவெளி கண்டிப்பாக பின்பற்றப்படும் எனவும் சுகாதார மற்றும் சுத்திகரிப்பு விதிமுறைகள் கவனமான முறையில் பின்பற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளியுடன் கூடிய இந்த வருடத்திற்கான துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச் (DFC) அக்டோபர் 30 – நவம்பர் 28 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. கலந்துகொள்ள பதிவு செய்ய விரும்புவோர் இங்கே கிளிக் செய்யவும்.