துபாயில் முக்கிய மூன்று சாலைகளை மூடும் RTA..மாற்று வழிகளில் செல்ல அறிவுறுத்தல் !
“அயர்ன்மேன் 70.3, 2021 துபாய் சாம்பியன்ஷிப் போட்டியை முன்னிட்டு மார்ச் 12, வெள்ளிக்கிழமை, ஜுமேரா சாலை, உம் சுகீம் சாலை மற்றும் அல் குத்ரா சாலையில் காலை 6:45 மணி முதல் பிற்பகல் 1:50 மணி வரை போக்குவரத்து நெரிசலை சீராக்கும் திட்டத்திற்கு நாங்கள் உறுதி அளிக்கிறோம்” என்று சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வியாழக்கிழமை அறிவித்துள்ளது. மேலும், பொதுமக்களின் ஒத்துழைப்பிற்கு நன்றியையும் தெரிவித்துள்ளது.
மேலும், “ஜுமேரா சாலை, உம் சுகீம் வீதி மற்றும் அல் குத்ரா சாலை வழியாக ஒவ்வொரு திசையிலும் ஒரு வழி மூடப்படும், அதே நேரத்தில் துபாய் போலீஸ் அகாடமியின் சந்திப்பில் ஜுமேரா சாலையின் ஒரு பகுதியான உம் சுகீம் வீதிக்கு இரண்டு பாதைகள் மூடப்படும்” என்றும் அறிவித்துள்ளது.