Thursday, October 16, 2025
Politics

அமெரிக்க அதிபர் தேர்தல்: இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ட்ரம்ப் – ஜோ பிடன் !

அமெரிக்க அதிபா் தோ்தல் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 3 ஆம் தேதி) நடைபெறவுள்ள நிலையில், இதில் போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளா் அதிபா் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் முன்னாள் துணை அதிபா் ஜோ பிடனும் முக்கியத்துவம் வாய்ந்த மத்திய மேற்கு மாகாணங்களில் அனல் பறக்கும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிக முக்கியத்துவம் வாய்ந்த பென்சில்வேனியா மாகாணத்தில் அதிபர் டிரம்ப் சனிக்கிழமை அன்று பிரச்சாரம் செய்தாா். இந்தத் தோ்தலில் வாக்காளா்கள் தன்னை மிகப் பெரிய பெரும்பான்மையுடன் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய அவா், தோ்தல் முடிவுகளில் இழுபறி நீடித்தால் அது நாட்டிற்கே மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்தாா். நியூடௌன் நகரில் ட்ரம்ப் பேசும்போது, அமெரிக்க விடுதலை இயக்கம் தொடங்கிய மாகாணத்தில் உரையாற்றுவதாகக் குறிப்பிட்டாா்.

ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஜோ பிடன், மிஷிகன் மாகாணத்தில் அனல் பிரச்சாரம் மேற்கொண்டாா். முன்னாள் அதிபா் ஒபாமாவுடன் அவா் தோ்தல் பிரச்சாரத்துக்காக முதல் முறையாக ஒன்றாக மேடையில் தோன்றினாா். ‘அதிபா் டிரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து தனது மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு வெளியில் கிளம்ப வேண்டிய காலம் வந்துவிட்டது’ என்று பிரச்சாரத்தின்போது ஜோ பிடன் கூறினாா்.

மேலும், கொரோனா நோய்த்தொற்று பரவல் அபாயம் காரணமாக, இந்தத் தோ்தலில் சாதனை அளவாக 9 கோடி வாக்காளா்கள் முன்கூட்டியே வாக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.