அமெரிக்காவில் இனி கொரோனா அதிகரித்தாலும் லாக்டவுனே இல்லை – டிரம்ப் அதிரடி பேச்சு !
ப்ளோரிடா: அமெரிக்காவில் கொரோனா வந்தாலும் கவலைப்படாதீங்க.. இனி ஒருபோதும் லாக்டவுன் கிடையாது என அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக கூறினார்.
அமெரிக்கா அதிபர் தேர்தல் நவம்பர் 3-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
டிரம்ப் அதிரடி பேச்சு:
இதனிடையே ப்ளோரிடா மாகாணத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எதுவுமே இல்லாமல் அசால்ட் பிரசாரம் செய்திருக்கிறார் டிரம்ப். இங்கு பேசிய டிரம்ப், கொரோனா வந்தால் நல்லது என நினைத்து கொள்ளுங்க.
லாக்டவுன் இல்லை
அமெரிக்காவில் இனிமேலும் ஒரு முறை கூட லாக்டவுன் அமல்படுத்தப்படப் போவது இல்லை. நாம் வர்த்தகங்களை தொடங்கிவிட்டோம் என்றார். முன்னதாக ஜோபிடன் அதே பகுதியில் பிரசாரம் செய்து வந்தார்.
மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த லாக்டவுன் செய்து நாட்டின் பொருளாதாரத்தை மூடப் போவதில்லை. நாட்டை நான் இழுத்து மூடப் போவதில்லை. இந்த கொரோனா வைரஸை நாட்டில் இருந்து விரட்டியடிப்போம் என்றார்.
அத்துடன் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தக் கூடியவர்தான் நமக்கு அதிபராக இருக்க வேண்டுமே தவிர கொரோனாவை நாடு முழுவதும் பரப்பிவிடக் கூடியவர் நமக்கு அதிபராக இருக்கத் தேவை இல்லை என்றார்.

