வாகனத்தை ஓடிய நிலையில் விட்டுச் சென்றால் Dh500 அபராதம்…அபுதாபி காவல்துறை எச்சரிக்கை !
அபுதாபி காவல்துறை புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதில் தங்கள் வாகனத்தை நிறுத்தாமல் ஓடிய நிலையில் வெளியில் பார்க்கிங் செய்துவிட்டுச் செல்லும் வாகன ஓட்டுனர்களுக்கு புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
வெள்ளிக்கிழமை சமூக ஊடகங்களுக்கு காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், ஷாப்பிங் செய்பவர்கள் தங்கள் வாகனத்தை முழுவதுமாக நிறுத்திவிட்டு செல்லவேண்டும் என்றும் வாகனம் ஓடிய நிலையில் விட்டுச் செல்லும் ஓட்டுனர்கள் சட்டத்தை மீறக்கூடியவர்கள் என்றும் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இச்சட்டத்தை மீறுபவர்களுக்கு 500 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் என்று மேலும் கூறியுள்ளது.