Monday, March 2, 2026
National

கரீம் (Careem) ஓட்டுனருக்கு கிடைத்த பாராட்டு… பயணியின் 900,000 திர்ஹம்ஸ் முழுத்தொகையும் காவல் அதிகாரியிடம் ஒப்படைப்பு !

கரீம் (Careem) நிறுவனத்தின் ஓட்டுநரின் நேர்மைக்காக துபாய் காவல்துறை அவரைப் பாராட்டி கவுரவப்படுத்தியுள்ளது.

ஓட்டுநர் முகமது ஓர்ஃபான் முகமது ரபீக் என்பவர் ஒரு பயணியை இறக்கிவிட்டு, அந்த நபர் அறியாமல் தனது வாகனத்தில் 900,000 திர்ஹம்ஸ் பணத்தை விட்டுச் சென்றதை அறிந்தார்.

இந்நிலையில், இந்த விஷயத்தை புர் துபாய் காவல் நிலையத்தில் தெரிவித்து முழுத்தொகையையும் அதிகாரியிடம் ஒப்படைத்தார். புர் துபாய் காவல் நிலைய இயக்குனர் பிரிகேடியர் அப்துல்லா காதிம் சோரூர், ரபீக்கின் நேர்மைக்காகவும், பெரிய தொகையை அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்ததற்காகவும் அவரைப் பாராட்டினார்.

மேலும், சமூக கூட்டாண்மை என்ற கருத்தை வலுப்படுத்தவும் தனிப்பட்ட பொறுப்புணர்வு உணர்வை ஊக்குவிக்கவும் துபாய் காவல்துறை ஆர்வமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

சமூகம் மற்றும் காவல்துறை இடையேயான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக அவருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. தன்னை கவுரவித்த அதிகாரிக்கு ரபீக் நன்றி தெரிவித்தார். தனக்கு கிடைத்த பாராட்டு மிகுந்த பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது என்றார்.