Monday, March 2, 2026
National

அமீரகம்: அபுதாபியில் உள்ள இந்திய தூதரகத்தில் வேலை வாய்ப்பு !

அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் அபுதாபியில் செய்தியாளர் பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

இப்பணிக்கு விண்ணப்பதாரர் உயர்நிலைப் பள்ளியின் குறைந்தபட்ச கல்வித் தகுதியும், அமீரக ரெசிடென்ஸி விசாவும் வைத்திருத்தல் வேண்டும்.

தகுதியானவர்கள் தங்களது பயோடேட்டாவுடன் அண்மையில் எடுத்த புகைப்படம், பாஸ்போர்ட் மற்றும் விசா பக்கத்தின் நகலுடன் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ ஏப்ரல் 20 செவ்வாய்க்கிழமைக்குள் சமர்ப்பிக்கலாம்.

மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களது பயோடேட்டாவை Embassy of India, Abu Dhabi, Plot No.10, Diplomatic area, off the Airport Road என்கிற முகவரிக்கு தூதரகத்தின் P.O. Box 4090, Abu Dhabi க்கு அனுப்பலாம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலுக்கு தொடர்பு கொள்ளப்படுவார்கள் என்று தூதரகம் தெரிவித்துள்ளது.