Monday, March 2, 2026
National

அமீரகம்: ரமலானின் கடைசி 10 நாட்கள் (கியாம்-உல்-லைல்) இன்று இரவு முதல் ஆரம்பம் !

புனித ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்களில் கியாம்-உல்-லைல் (Qiyam-ul-layl) என்று அழைக்கப்படும் சிறப்பு பிரார்த்தனை (தராவீஹ் தொழுகை) நடத்தப்படும்.

நாடு முழுவதும் உள்ள மசூதிகளில் மே 2 ஆம் தேதி இன்று இரவு முதல் சிறப்புத் தொழுகை நடைபெற உள்ளது.

இந்நிலையில், வழிபாட்டாளர்கள் பின்பற்றவேண்டிய கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளும் தொழுகைக்கான நேரக் கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • சிறப்புத் தொழுகை 30 நிமிடங்களில் நடைபெற்று முடிக்கப்பட வேண்டும்
  • சிறப்புத் தொழுகையை நள்ளிரவு 12.00 மணி முதல் 12.30 மணிக்குள் நிறைவேற்ற வேண்டும்
  • தொழுகை நடந்து முடிந்ததும் மசூதிகள் மூடப்பட வேண்டும்
  • இஃதிகாஃப் (I’tikaf) இருப்பதற்கு அனுமதி இல்லை
  • வழிபாட்டாளர்கள் அனைத்து நேரங்களிலும் முகக்கவசங்களை அணிந்திருத்தல் அவசியம்
  • வழிபாட்டாளர்கள் தங்களின் தொழுகைக்கான விரிப்புகளை எடுத்து வரவேண்டும்
  • சமூக இடைவெளியை பின்பற்றி தொழுதல் வேண்டும்

மேலும், முதியவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் மசூதிகளுக்குச் செல்வதைத் தவிர்த்து, அதற்கு பதிலாக வீட்டிலேயே பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.