Monday, March 2, 2026
National

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் பிடிபட்ட இளைஞர்..சுமார் Dh13,000 கொடுத்து போலி பாஸ்போர்ட் பெற்றதை ஒப்புக்கொண்டார் !

அரபு வம்சாவளியைச் சேர்ந்த 25 வயதுடைய நபர் ஒருவர் துபாய் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவர் அரசாங்க உத்தியோகபூர்வ முத்திரைகளில் மோசடி செய்ததாகவும், எமிரேட் ஏர்லைன்ஸில் ஐரோப்பாவுக்கு புறப்பட்ட விமானத்தில் ஒரு போலி EU (ஐரோப்பிய ஒன்றிய) பாஸ்போர்ட்டில் பதுங்க முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.

துபாய் சர்வதேச விமான நிலையத்தின் (DXB) பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர், ஒரு பயணியின் போர்டிங் பாஸ் போலியானது என்பதைக் கண்டறிந்த சம்பவம் ஜனவரி மாத இறுதியில் நிகழ்ந்ததாக துபாய் போலீஸ் பதிவுகள் தெரிவிக்கின்றன.

அந்நபர் ஒரு EU பாஸ்போர்ட்டை வைத்திருந்ததும் விசா இல்லாமல் ஐரோப்பாவிற்கு நுழைய அனுமதிக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆயினும் அந்த EU பாஸ்போர்ட்டும் அதிகாரிகளால் போலியானது என்று கண்டறியப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில் அவர் உத்தியோகபூர்வ முத்திரைகளை பயன்படுத்தி மோசடி செய்து நாடகமாடியது அதிகாரிகளின் சந்தேகத்திற்கு இடமின்றி அவர் போலியானவர் என்பது தெரியவந்தது. ஆரம்பத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை குற்றமற்றவர் என்று கூறினார். பின்னர் துபாய் காவல்துறையினரின் தீவிர விசாரணையின் போது அவர் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

கடந்த ஆண்டு சுற்றுலா விசாவில் துபாய்க்கு பயணம் செய்தபோது, ​​தனது ஆசிய நண்பரிடமிருந்து 3,000 யூரோக்களுக்கு (கிட்டத்தட்ட 13,000 திர்ஹம்ஸ்) போலி EU பாஸ்போர்ட்டை வாங்கியதாக அவர் போலீசாரிடம் ஒப்புக்கொண்டார்.