அமீரகம்: பொது பள்ளிகளில் (Public Schools) வெளிநாட்டு மாணவர்களுக்கான சேர்க்கைப் பதிவு ஏப்ரல் 15 வரை தொடரும் !
அமீரகத்தில் அடுத்துவரும் கல்வியாண்டு அமர்வுக்கு கிரேட் 2 முதல் 12 வரையிலான வெளிநாட்டு மாணவர்களின் பொதுப் பள்ளிகளுக்கான பதிவு (Public Schools Registration) ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 4 ல் தொடங்கி ஏப்ரல் 15 வரை நடைபெறும் என்று அமீரக பள்ளிகள் நிறுவன அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அபுதாபியின் தொலைதூர பகுதிகளுக்கு சில விதிவிலக்குகள் பொருந்தும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள மாணவரின் சரியான வயதை அதிகாரிகள் தீர்மானிப்பார்கள். முதலில், ஆன்லைன் பதிவு செயல்முறைக்கு பதிவு செய்வதற்கான அனைத்து துணை ஆவணங்களும் தேவை என்றும், பின்னர் அதிகாரிகள் ஆவணத்தை ஆராய்ந்து, மாணவர்களின் தேர்ச்சி குறித்து அவர்களுக்கு ஒரு குறுஞ்செய்தி மூலமாகவும், அமீரக பள்ளிகள் ஸ்தாபனத்தின் வலைத்தளம் மூலமாகவும் அறிவிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
ஒரு விண்ணப்பதாரர் பள்ளியில் மாணவரின் சேர்க்கைக்கான இடத்தைப் பெறுவதற்கு பள்ளிக்கு அருகிலேயே வசிக்க வேண்டும். பதிவு செய்வதற்கு குறிப்பிட்ட தேதிக்குள் பதிவுசெய்து முடித்தல் வேண்டும் மற்றும் அனைத்து விதிமுறைகளுக்கும் இணங்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகளின் சேர்க்கைக்கு ஆன்லைனில் tinyurl.com/publicschoolre எனும் முகவரியில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், அவர்கள் ஒரு சிறப்பு கணக்கை உருவாக்கி பதிவு கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து விதிமுறைகளும் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே ஒரு மாணவர் சேர்க்கப்படுவார் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

