Monday, March 2, 2026
NationalTravel

உம்-அல்-குவைன்: வாகன ஓட்டுனர்கள் கவனத்திற்கு: ஸ்மார்ட் சிஸ்டம் மூலம் 400 திர்ஹம்ஸ், 4 கருப்பு புள்ளிகள் அபராதம்! காவல்துறை எச்சரிக்கை!

உம்-அல்-குவைனில், மற்ற வாகனங்களுக்கு இடையில் தூரத்தை கடைபிடிக்காமல் அருகில் பின்தொடர்ந்து செல்லும் வாகன ஓட்டுநர்கள் (Tailgaters) ஸ்மார்ட் சிஸ்டத்தால் கண்காணிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுவார்கள் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

உம்-அல்-குவைன் போலீஸ் பொதுத் தலைமையகத்தின் போக்குவரத்து மற்றும் ரோந்துத் துறை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், மற்ற வாகனங்களுக்கு இடையில் பாதுகாப்பான தூரத்தை கடைபிடிக்காத வாகன ஓட்டுநர்களுக்கு 400 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்பட்டு நான்கு கருப்பு புள்ளிகள் வழங்கப்படும் என்று கூறியுள்ளது.

அமீரக போக்குவரத்துச் சட்டத்தின் 52-வது பிரிவைக் கடைப்பிடிக்காததன் விளைவாக ஏற்படும் போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணிக்க இந்த ஸ்மார்ட் அமைப்பு செயல்படுத்தப்படும். இந்நடைமுறையானது, மரணங்கள் (Deaths), கடுமையான காயங்கள் (Serious Injuries) மற்றும் சொத்து இழப்பு (Loss of Property) போன்றவற்றைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும், நாட்டில் வாகன ஓட்டுநர்களின் பாதுகாப்பை பாதுகாப்பதற்கான உள்துறை அமைச்சகத்தின் நகர்வுகளுக்கு ஏற்ப இந்த நடவடிக்கை உள்ளதாக அறிவித்துள்ளது.