Friday, October 17, 2025
National

RAK: ரமலானில் மீன் சந்தைகள் மற்றும் இறைச்சிக் கூடங்கள் திறக்கப்படும் நேரங்களை அறிவித்த நகராட்சி !

புனித ரமலான் மாதத்தில் மீன் சந்தைகள் மற்றும் இறைச்சிக் கூடங்கள் திறக்கும் நேரங்களை ராஸ் அல் கைமா நகராட்சித் துறை வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை The Central Abattoir Al Falaih திறந்திருக்கும் என்றும் ராஸ் அல் கைமா ஸ்லாட்டர்ஹவுஸ் (Slaughterhouse) மற்றும் அல்கெயில் (Al Ghayl) காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஸ் அல் கைமா மீன் சந்தை மற்றும் தக்தகா (Dakdaga) மீன் சந்தை ஆகியவற்றிற்கு காலை 6 மணி முதல் 12 மணி வரை வாடிக்கையாளர்களுக்கு அனுமதி என்றும் அல் மெயிரிட் (Al Mairid) மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடை சந்தையின் இயக்க நேரம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இருக்கும், அதே நேரத்தில் Al Dara border crossing காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கும்.

மேலும், இந்த புனித மாதத்தில் மக்கள் தங்கள் தேவைகளுக்காக ஷாப்பிங் செய்யும்போது பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு நகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.