அமீரகம்: ரமலானில் அரசுப் பணியாளர்களுக்கான வேலை நேரம் கொண்ட சுற்றறிக்கை வெளியீடு !
அமீரகத்தில் ரமலான் மாதத்தில் அமைச்சகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் வேலை நேரத்தை நிர்ணயிக்கும் சுற்றறிக்கையை அரசு மனித வளங்களுக்கான மத்திய ஆணையம் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.
புனித ரமலான் மாதத்தில் அமைச்சகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் உத்தியோகபூர்வ வேலை நேரம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இருக்கும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், கட்டாய பணியை மேற்கொள்ள தேவைப்படும் பணியாளர்களுக்கு இந்நேரக்கட்டுப்பாடு பொருந்தாது என்றும் அறிவித்துள்ளது.
அமீரகத்தில் பிறை தென்படுவதைத் தொடர்ந்து ரமலான் ஏப்ரல் 13 ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.