அபுதாபி, துபாய், ஷார்ஜா போன்ற கடலோர பகுதிகளில் இன்று வெப்பநிலை அதிகரிக்கும், ஓரளவு மேகமூட்டம் காணப்படும்…வானிலை மையம் அறிவிப்பு !
அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) அறிவிப்பின் படி, இன்று நாடு முழுவதும் வெப்பநிலை அதிகரிக்கும் மற்றும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜா போன்ற கடலோரப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 24-28°C வரை இருக்கும். மேலும், நாட்டின் உட்புற பகுதிகளில் வெப்பநிலை அதிகபட்சம் 25-30°C வரை என்றும் மலைப்பகுதிகளில் 19-22°C வரை பதிவாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை, நாட்டில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாக 32.1°C ஷார்ஜாவின் கல்பாவில் (Kalba) பிற்பகல் 3:45 மணிக்கு பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் NCM கூறுகையில், ‘இன்று இரவு மற்றும் செவ்வாய்க்கிழமை காலையில் காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும். இதன் விளைவாக சில வடக்கு கடலோர மற்றும் உட்புற பகுதிகளில் மூடுபனி அல்லது மூடுபனி உருவாகும் வாய்ப்பு உள்ளது என்றும் காற்றின் ஈரப்பதம் இன்று உட்புற பகுதிகளில் 90 சதவீதத்தையும், கடலோரப் பகுதிகளில் 85 சதவீதத்தையும் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என்று அறிவித்துள்ளது.

