அமீரகம்: உணவுப்பொருட்களில் கலப்படம் செய்தால் மூன்று மாதம் சிறை…2 மில்லியன் திர்ஹம்ஸ் வரை அபராதம் !
நாம் அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவுப்பொருட்களில் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அல்லது கலப்படம் செய்யப்பட்ட உணவுப்பொருட்களை வர்த்தகம் செய்பவர்களுக்கான அபராதம் குறித்து அமீரக பொது வழக்குத்துறை (Public Prosecution, PP) அறிவிப்பு செய்துள்ளது.
இதுகுறித்து ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், சனிக்கிழமை மேற்கொண்ட விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளது.
“உணவுப் பாதுகாப்பு தொடர்பான 2015 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க கூட்டாட்சி சட்டத்தின் பிரிவு 14 (1) படி, உணவில் கலப்படம் செய்தாலும் அல்லது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அழுகியநிலையில் உணவுப்பொருட்களை விற்று வர்த்தகம் செய்தாலும் அவர்களுக்கு மூன்று மாதங்களுக்கும் குறையாத காலத்திற்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் மற்றும் Dh100,000 முதல் Dh200,000 வரை அபராதம் விதிக்கப்படும்” என்று அறிவித்துள்ளது.
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது கலப்படம் செய்யப்பட்ட உணவை வர்த்தகம் செய்வதற்கான அபராதத்தை தெளிவுபடுத்துவது, சமூக உறுப்பினர்களிடையே சட்ட கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பான, அமைதியான சட்டத்தை உறுதி செய்வதற்காக நாட்டின் சட்டம் குறித்த பொது விழிப்புணர்வின் அளவை உயர்த்துவதற்கும் அமீரக பொது வழக்குத்துறை மேற்கொண்டுள்ள பிரச்சாரத்தின் ஒரு முயற்சியேயாகும் என்று தெரிவித்துள்ளது.