Friday, October 17, 2025
National

மார்ச் 1 ஆம் தேதிக்கு முன் காலாவதியான விசாவில் உள்ளவர்களா நீங்கள்! டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன் வெளியேறினால் அபராதம் இல்லை !!

அமீரகத்தில் காலாவதியான விசிட் விசாவில் உள்ளவர்கள் மற்றும் அபராதம் விதிக்கப்படுவதற்கான கால அவகாசத்திலிருந்து பயனடைய விரும்புவோர் துபாயிலிருந்து புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் புகார் அளிக்க வேண்டும் என்று ஃபெடரல் அத்தாரிட்டி ஆஃப் அடையாள மற்றும் குடியுரிமை ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது.

மார்ச் 1 ஆம் தேதிக்கு முன் காலாவதியான விசாவில் உள்ளவர்களுக்கு அனைத்து அபராதங்களிலிருந்தும் மற்றும் பிற நிர்வாகக் கட்டுப்பாடுகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்படும். விசிட் விசாக்கள் மற்றும் குடியுரிமை விசாக்களில் உள்ளவர்கள் மார்ச் 1 ஆம் தேதிக்கு முன்னர் தங்களுடைய விசாக்கள் காலாவதியாகியிருந்தால் அவர்கள் டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் நாட்டிலிருந்து வெளியேறினால் இந்த விலக்குகளைப் பெறலாம்.

அபுதாபி, ஷார்ஜா மற்றும் ராஸ் அல் கைமா விமான நிலையங்களில் இருந்து பயணிக்கும் மார்ச் 1 ஆம் தேதிக்கு முன்னர் காலாவதியான விசாக்களுடன் உள்ளவர்கள், பொது மன்னிப்பு திட்டத்தைப் பெறுவதற்கு புறப்படும் நேரத்திற்கு குறைந்தது ஆறு மணி நேரத்திற்கு முன்னதாக விமான நிலையத்தை அடைய வேண்டும். துபாய் மற்றும் அல் மக்தூம் விமான நிலையங்கள் வழியாக பயணிப்பவர்கள் புறப்படும் நேரத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் துபாய் சிவில் ஏவியேஷன் பாதுகாப்பு மையத்தில் தொடர்பு கொள்ள வேண்டும்.

மேலும், காலாவதியான குடியுரிமை விசாவில் உள்ளவர்கள் டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன் தங்களுடைய விமான டிக்கெட்டை முன்பதிவு செய்வதுடன் புறப்படும் நேரத்திற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்னதாக டிக்கெட் மற்றும் பாஸ்போர்ட்டுடன் விமான நிலையத்திற்கு வர வேண்டும்.