அபராதம்: அமீரகத்தில் விசிட் விசாவில் (Visit Visa) உள்ளவர்கள் கவனத்திற்கு !!
அமீரகத்தில் மார்ச் 1 க்கு பிறகு காலாவதியான விசாவில் (Visit Visa / Tourist Visa) தங்கியிருக்கும் பார்வையாளர்கள் (Visitors) மற்றும் சுற்றுலாப்பயணிகளுக்கு (Tourists) செப்டம்பர் 11 முதல் அபராதத்தொகை விதிக்கப்படுகிறது.
முகவர் (Agent) ஒருவர் கூறுகையில், “விசா தங்கும் காலம் முடிவடைந்து காலாவதியான விசாவில் உள்ள ஒருவர், முதல் நாள் அபராதத் தொகையாக Dh200 திர்ஹம்ஸ்-ம், அடுத்து வரும் ஒவ்வொரு நாளுக்கும் Dh100 திர்ஹம்ஸ்-ம், சேவை கட்டணமாக (Service Charge) Dh100 திர்ஹம்ஸ்-ம் செலுத்த வேண்டும். இருப்பினும், இந்த அபாரதங்களின் கணக்கீடு செப்டம்பர் 1 முதல் அல்லது பார்வையாளர்களின் விசா காலாவதியான சரியான தேதியிலிருந்து வந்ததா என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.
சரியான முழு அபராதத்தொகை விவரங்கள் தங்கியிருக்கும் விசா தகவலின் அடிப்படையில் (Based on Visa Information) விமான நிலையங்களில் உள்ள குடியேற்ற அதிகாரிகளால் (Immigration Authorities) மட்டுமே கணக்கிட்டு கூறப்படும்”.