Thursday, October 16, 2025
NationalWeather

அமீரகம்: அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைபெய்ய வாய்ப்பு..தேசிய வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

அமீரகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்டுள்ள கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் மூன்று நாட்களுக்கு நாட்டின் சில பகுதிகளில் அதிக மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய வானிலை முன்னறிவிப்பின்படி, பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் பிற்பகலுக்குள் கிழக்கு நோக்கி வெப்பச்சலன மேகம் உருவாகலாம் என்றும் இதனால் மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.

செவ்வாய் மற்றும் புதன்கிழமை (மே 4 மற்றும் 5) இரண்டு நாட்களும் தூசி நிறைந்த காற்றும் வானம் மேகமூட்டமாகவும் இருக்கும். செவ்வாயன்று மழைக்கான வெப்பச்சலன மேகங்கள் உருவாவதைக் காணலாம். மேலும், பகல் நேர வெப்பநிலை கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த நாள் வெப்பநிலை சற்று குறையும் என்றும் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது. மேலும், குடியிருப்பாளர்கள் வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளிலிருந்து விலகி இருக்குமாறு NCM எச்சரிக்கை விடுத்துள்ளது.