அமீரகத்தில் இன்று வெப்பநிலை 41°C வரை பதிவாகும்…வானிலை மையம் அறிவிப்பு !
அமீரகத்தில் இன்று பெரும்பாலான பகுதிகளில் பகல்நேர வானிலை மிகவும் வெப்பமானதாக இருக்கும் என்று NCM (National Centre of Meteorology) கணித்துள்ளது.
அமீரகத்தின் தேசிய வானிலை மையம், வெள்ளிக்கிழமை பகல்நேர வெப்பநிலை மிகவும் சூடாக இருக்கும் என்றும் சில உள் பகுதிகளில் வெப்பநிலை 41 டிகிரி செல்ஸியஸ் வரை பதிவாகும் என்றும் அறிவித்துள்ளது.
இன்றிரவு மற்றும் சனிக்கிழமை அதிகாலை வரை காற்றில் அதிக ஈரப்பதம் இருக்கும் என்றும், சில கடலோர மற்றும் தீவு பகுதிகளில் 90% ஈரப்பதத்தை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இருப்பினும், வானம் ஓரளவு மேகமூட்டமாகவும், மிதமான காற்று வீசக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

