செவ்வாய் கிரகத்தை அடைய இருக்கும் 3 விண்கலங்களில் அமீரகத்தின் ஹோப் விண்கலம் முதலிடம் !
செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்யும் பணியில் பல்வேறு நாடுகள் அவ்வப்போது தங்களின் விண்கலங்களை அனுப்பி சோதனை செய்து வருகின்றன.
இந்நிலையில் பிப்ரவரி 9 செவ்வாய்க்கிழமை அமீரக நேரப்படி இரவு 7.42 மணிக்கு ரெட் பிளானட் என்றழைக்கப்படும் செவ்வாய்கிரகத்தின் சுற்றுப்பாதையில் நுழைய அரபு நாடு தொடங்கிய முதல் கிரகத்தின் ஆராய்ச்சியாக ஹோப் விண்கலத்தின் ஆய்வு (Hope Probe) திட்டமிடப்பட்டுள்ளது.
அமீரகத்தைத் தவிர, சீனாவும் அமெரிக்காவும் கடந்த ஆண்டு செவ்வாய் கிரக ஆராய்ச்சி திட்டங்களை அறிமுகப்படுத்தின. மேலும் அவை இந்த மாதம் தரையிறங்க உள்ளன. பிப்ரவரி 10 அன்று, சீனாவின் தியான்வென் -1 விண்கலம் செவ்வாய் கிரகத்தை எட்டும் இரண்டாவது விண்கலமாக இருக்கும் அதே நேரத்தில் நாசாவின் விண்கலம் பிப்ரவரி 18 அன்று செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக, அமெரிக்கா, இந்தியா, முந்தைய சோவியத் யூனியன் மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆகியவற்றின் விண்கலங்கள் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தை சென்றடைந்துள்ளன.
செவ்வாய் கிரக ஆராச்சிக்காக அனுப்பப்படும் இந்த விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்குவது, அமீரகத்தை இந்த சாதனையை எட்டிய உலகின் ஐந்தாவது நாடாக மாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

