HealthWorld

கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த உலகின் முதல் நாடானது UK !

ஃபைசர்-பயோஎன்டெக் (Pfizer-BioNTech) தடுப்பூசியை பயன்படுத்த ஒப்புதல் அளித்த உலகின் முதல் நாடாக UK (பிரிட்டன்) திகழ்கிறது. மேலும் அடுத்த வாரம் முதல் இது வெளியிடப்படும் என்றும் கூறியது.

“ஃபைசர்-பயோஎன்டெக்கின் கோவிட் -19 தடுப்பூசியை பயன்படுத்த ஒப்புதல் அளிக்க சுயாதீன மருந்துகள் மற்றும் சுகாதார தயாரிப்புகள் ஒழுங்குமுறை அமைப்பின் (MHRA) பரிந்துரையை அரசாங்கம் இன்று ஏற்றுக்கொண்டது” என்று பிரிட்டிஷ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் “இந்த தடுப்பூசி அடுத்த வாரம் முதல் பிரிட்டன் முழுவதும் கிடைக்கும்.”

இந்த திட்டம் அடுத்த வார தொடக்கத்தில் தொடங்கும் என்று சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் (Matt Hancock) தெரிவித்தார்.

“இது மிகவும் நல்ல செய்தி” என்றும் ஹான்காக் கூறினார்.