3 நாட்கள் நடைபெறும் துபாய் சூப்பர் சேல்: 90% வரை தள்ளுபடி விற்பனை !!
இந்த வருடமும் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான பொருட்கள் விற்பனையில் மிகப்பெரிய தள்ளுபடியை அறிவித்திருக்கிறது துபாய். எனவே இந்த வருடத்தின் இறுதியாக 3 நாள் சூப்பர் விற்பனை மீண்டும் தொடங்க உள்ளது. நவம்பர் 26 முதல் 28 வரை வணிகமையங்கள் மற்றும் மால்களில் நடைபெறும் இத்தள்ளுபடி விற்பனையில், குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் நகரத்தின் பல்வேறு வகையான வாழ்க்கை முறை, எலக்ட்ரானிக்ஸ், அழகு, பேஷன் மற்றும் பல பொருட்களின் விற்பனையில் 90 சதவீத அதிரடி விலை குறைப்பை அனுபவித்து மகிழ உள்ளனர்.
பெரிய பிராண்டுகள் மற்றும் உள்நாட்டு சில்லறை விற்பனையாளர்கள் பங்கேற்கும் இந்த மூன்று நாள் சூப்பர் விற்பனையின் காரணமாக சுமார் 1,500 க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் மற்றும் கடைகளில் பொருட்களின் விலைகள் 90 சதவீதம் வரை வீழ்ச்சியடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இத்தள்ளுபடி விற்பனையில் நகரத்தின் அனைத்து மால்கள், கடைகள் மற்றும் ஷாப்பிங் இடங்கள் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் உறுதியாக பின்பற்றப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் 3 நாள் சூப்பர் விற்பனை விவரங்களுக்கு www.3daysupersale.com ஐப் பார்வையிடவும்.