Friday, October 17, 2025
National

துபாயில் நடைபெற்று வந்த ‘ஆர்ட் துபாய்’ கலைக்கண்காட்சி இன்றுடன் நிறைவு !

துபாயில் சர்வதேச நிதி மையத்தில் கடந்த 29 ம் தேதி 31 நாடுகளை சேர்ந்த கலைஞர்கள் உருவாக்கிய கலைவடிவங்கள் கொண்ட ‘ஆர்ட் துபாய்’ சர்வதேச கலைக்கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.

இதில் நாம் சாதாரணமாக பார்க்கக்கூடிய எளிமையான பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பல்வேறு வித்தியாசமான கலைவடிவங்கள் இடம்பெற்றுள்ளன.

கண்காட்சி கலைவடிவங்களில் சில:

* கோள வடிவத்தில் விளையாட்டு பொம்மைகளை வைத்து உருவாக்கப்பட்ட வடிவங்கள்.
* இரும்பு சுருள் படர்ந்து சென்று அமரும் நாற்காலியை உருவாக்குவது.
* காகத்தின் வயிற்றில் ஏழு கிரகங்கள் தெரிவது போன்ற அமைப்பு.
* கம்பிகளை வைத்து உருவாக்கிய மனித வடிவங்கள்.
* தொட்டு உணரும் வகையில் உருவாக்கப்பட்ட ஓவியங்கள்.

இன்றுடன் நிறைவு பெறும் கண்காட்சி:

கண்காட்சியில் இடம்பெற்றுள்ள கலைவடிவங்கள் குறித்து பார்வையாளர்களுக்கு கண்காட்சி அதிகாரிகள் விளக்கமளித்தனர். கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு, அரங்கங்களில் சமூக இடைவெளி பராமரிக்கப்பட்டு சுகாதார பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைபிடிக்கபடுகிறது.

இந்நிலையில், இக்கண்காட்சி இன்றுடன் (சனிக்கிழமை) நிறைவு பெறுகிறது.