Sunday, October 19, 2025
NationalTravel

அபுதாபி: வருகை நாடுகளின் புதுப்பிக்கப்பட்ட ‘கிரீன் லிஸ்ட்’ (Green List) வெளியீடு !

அபுதாபியின் கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறை (The Department of Culture and Tourism, DCT Abu Dhabi) ‘புதுப்பிக்கப்பட்ட கிரீன் லிஸ்ட்’ (Updated Green List) நாடுகளின் விவரங்களை ஏப்ரல் 5, திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது.

இந்த நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு அபுதாபியில் தரையிறங்கிய பின்னர் கட்டாய தனிமைப்படுத்தலிலிருந்து விலக்கு அளிக்கப்படும். மேலும், அபுதாபி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தவுடன் மட்டுமே அவர்கள் பி.சி.ஆர் (PCR) பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

முந்தைய கிரீன் லிஸ்டுடன் ஒப்பிடும்போது, ​​புதிய லிஸ்டில் இஸ்ரேல் நாடு சேர்க்கப்பட்டுள்ளது. ‘கிரீன் லிஸ்ட்டில்’ சேர்க்கப்பட்டுள்ள நாடுகள், பிராந்தியங்கள் மற்றும் பிரதேசங்கள் ஆகியவை சர்வதேச முன்னேற்றங்களின் அடிப்படையில் தொடர்ந்து புதுப்பிக்கப்படும்.

கிரீன் லிஸ்டில் புதுப்பிக்கப்பட்டுள்ள 14 நாடுகளின் பெயர்கள்:

Australia

Bhutan

Brunei

China

Greenland

Hong Kong (SAR)

Iceland

Israel

Mauritius

Morocco

New Zealand

Saudi Arabia

Singapore

South Korea

‘கிரீன் லிஸ்ட்’ குறித்த கூடுதல் தகவல்களை www.visitabudhabi.com என்ற இணையதளத்தின் மூலம் காணலாம். மேலும், அனைத்து பயணநிலை குறித்தும், பிற புதுப்பித்தல் விவரங்கள் குறித்தும் DCT Abudhabi தொடர்ந்து வெளியிடும் என்று அறிவித்துள்ளது.