அபுதாபி: ட்ரான்சிட் பயணிகளுக்கான (Transit Passengers) புதிய விரைவான விமான சேவை இணைப்பு (Fast Track Connection) அறிமுகம் !
அபுதாபி சர்வதேச விமான நிலையம் ட்ரான்சிட் பயணிகளுக்கான (Transit Passengers) ஒரு புதிய விரைவான விமான சேவை இணைப்பை (Fast Track Connection) அறிமுகப்படுத்தியுள்ளது.
இப்புதிய சேவை விமான நிலையத்தின் ட்ரான்சிட் சேவையை 27 சதவிகிதம் அதிகரிப்பதின் மூலம் குறுகிய இணைப்பு நேரங்களை எளிதாக்குகிறது, மேலும் மேம்பட்ட மற்றும் தடையற்ற அனுபவத்தை பயணிகளுக்கு வழங்குகிறது.
இந்த புதிய நடைமுறையின் கீழ், பயணிகளின் போக்குவரத்து மற்றும் அவர்களின் சாமான்களை (Baggage) அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு விரைவுபடுத்தும்.
இந்த முயற்சி பொது சிவில் விமான போக்குவரத்து ஆணையம், நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறை, சுங்க பொது நிர்வாகம், அபுதாபி விமான நிலையங்கள்,எதிஹாட் ஏர்வேஸ் மற்றும் சர்வதேச விமான நிலைய கூட்டாளிகளுடன் (Partners) இணைந்து உருவாக்கப்பட்டது.

