தமிழகத்தில் 9ம் & 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 8ம் தேதி முதல் வகுப்புகள் ஆரம்பம் !
தமிழகத்தில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, வரும் பிப்ரவரி 8ம் தேதி முதல் 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்புகள் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், கொரானா தொற்று பரவுவதை தடுக்க தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப்வரி 28ம் தேதி வரை நீட்டிக்கப்ட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வரும் தமிழக அரசு இந்த முறை அதிகளவிலான தளர்வுகளை அறிவித்துள்ளது. கடந்த 9 மாதங்களாக செயல்படாமல் இருந்த பள்ளிகள் கடந்த மாதம் முதல் செயல்பட தொடங்கின. இதில் முதற்கட்டமாக பொதுத்தேர்வை சந்திக்கும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன.
9 & 11ம் வகுப்புகள்:
இந்நிலையில் வரும் 8ம் தேதி முதல் 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்புகளும் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பள்ளிகள் (9 மற்றும் 11ஆம் வகுப்புகள் மட்டும்) 08.02.2021 முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தொடங்க அனுமதிக்கப்படுகிறது. மேலும், மாணவர்களின் விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகளுக்கும் அனுமதி:
கலை, அறிவியில், தொழில்நுட்ப, பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் / பல்கலைக் கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான (பட்டயப் படிப்பு உட்பட) அனைத்து வகுப்புகளும் 08.02.2021 முதல் தொடங்க அனுமதிக்கப்படுகிறது. அவர்களின் விடுதிகளும் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

