கொரோனா தடுப்பூசியைப் பெற்ற ஊழியர்கள் மட்டுமே பணியிடங்களுக்கு செல்ல அனுமதி..சவூதி அரேபியா அறிவிப்பு!
கொரோனா தடுப்பூசி போடப்பட்ட ஊழியர்கள் மட்டுமே தங்கள் பணியிடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று சவூதி அரேபியா வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
ஊழியர்களை மீண்டும் அலுவலகங்களுக்குள் அனுமதிக்க அவர்கள் கொரோனா நோய்த்தொற்றிற்கான தடுப்பூசியைப் பெற்றிருத்தல் வேண்டும் என்று சவூதி மனிதவள மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் கூறியதாக அந்நாட்டு மாநில தொலைக்காட்சி அல் எக்பாரியா (Al Ekhbariyah TV) தெரிவித்துள்ளது.
தங்கள் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்ய அனைத்து துறைகளுக்கும் அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
மேலும், இந்த கொள்கை எவ்வாறு மற்றும் எப்போது நாட்டில் செயல்படுத்தப்படும் என்பது குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அல் எக்பாரியா நிறுவனம் தெரிவித்துள்ளது.