அஜ்மானில் ரமலான் பணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார மேம்பாட்டுத் துறை தகவல் !
ரமலானை முன்னிட்டு அமீரகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் பணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்பொழுது, அஜ்மானில் ரமலான் பணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமீரகத்தின் பொருளாதார மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரமலான் மாதத்தில் அதிகாலை 4 மணி வரை பொருளாதார நடவடிக்கைகளுக்கான பணி நேரத்தை நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும், அனைத்து நிறுவனங்களும் கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் தடுப்பு நடவடிக்கைகளை அந்நிறுவனங்கள் முறையாக கடைபிடிப்பதை உறுதி செய்ய அதிகாரிகள் ஆய்வு பிரச்சாரங்களை மேற்கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விதிகளை மீறுபவர்கள் மீது நிர்வாக மற்றும் சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.