Saturday, October 18, 2025
National

அமீரகத்தின் 49 வது தேசிய தின கொண்டாட்டம்: 49 GB இலவச மொபைல் டேட்டா வழங்கும் எதிசலாட் நிறுவனம் !

அமீரகத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான எதிசலாட் நிறுவனம் (Etisalat) அமீரகத்தின் 49 வது தேசிய தினத்தை முன்னிட்டு தனது வாடிக்கையாளர்களுக்கு 49 GB இலவச மொபைல் டேட்டாவை வழங்கும் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் எதிசலாட் அப்ளிகேஷனில் *49# என்று டயல் செய்வதன் மூலம் இச்சலுகையை பெறமுடியும் எனவும் எதிசலாட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமீரகத்தின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான எதிசலாட் இந்த இலவச மொபைல் டேட்டாவை டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய இரண்டு நாட்களுக்கு வழங்குகிறது.