துபாய்: அல்கராமா பகுதியில் பேருந்தில் தீவிபத்து !
துபாயின் அல்கராமா பகுதியில் பொதுப் போக்குவரத்து பேருந்தில் (Public Transport Bus) இன்று மாலை திடீரென தீப்பிடித்ததாக துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ட்விட்டரில் செய்தி வெளியிட்டிருக்கிறது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதுமில்லை என்றும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து இன்று மாலை 5.30 மணியளவில் புர்ஜுமான் (Burjuman ) ஷாப்பிங் மால் அருகே ஏற்பட்டிருக்கிறது.
மேலும் சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோவைப் பார்க்கும்போது ஸ்பின்னிஸ் சூப்பர் மார்கெட்டின் (Spinney’s supermarket) அருகே விபத்திற்குள்ளான பேருந்து நின்றுகொண்டிருப்பது தெரியவருகிறது.