Monday, March 2, 2026
World

இந்தியாவிலிருந்து குவைத் நாட்டிற்கு வரும் அனைத்து விமானங்களும் ரத்து! குவைத் அரசு அறிவிப்பு !

குவைத்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், சனிக்கிழமை அதிகாலை வெளியிட்டுள்ள ட்வீட்டில், இந்தியாவிலிருந்து வரும் அனைத்து நேரடி வணிக விமானங்களும் ஏப்ரல் 24 முதல் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

உலகளாவிய கொரோனா வைரஸ் தாக்கத்தின் நிலையை மதிப்பாய்வு செய்தபின் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து நேரடியாகவோ அல்லது வேறு நாடு வழியாகவோ குவைத்திற்கு வரும் அனைத்து பயணிகளும் இந்தியாவுக்கு வெளியே குறைந்தது 14 நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்றும் இல்லையெனில் அவர்கள் உள்ளே செல்ல தடை விதிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

இருப்பினும், குவைத் குடிமக்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்கள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். மேலும், சரக்கு விமான சேவை பாதிக்கப்படாது என்று அறிவித்துள்ளது.