துபாய் வந்தடைந்தது இஸ்ரேலின் முதல் பயணிகள் விமானம் !
இஸ்ரேல் நாட்டின் விமான நிறுவனமான இஸ்ரேர் (ISRAIR) செவ்வாயன்று துபாய் சர்வதேச விமான நிலையத்தில் (DXB) தரையிறங்கிய முதல் பயணிகள் விமானமாக திகழ்ந்து வரலாற்றை உருவாக்கியிருக்கிறது.
166 பயணிகளுடன் காலை 10 மணிக்கு (இஸ்ரேல் நேரம்) டெல் அவிவ்-யாஃபோவில் இருந்து புறப்பட்ட விமானம் 6H 663, துபாய்க்கு உள்ளூர் நேரப்படி மாலை 5:10 மணிக்கு வந்து சேர்ந்தது.
இஸ்ரேர் தனது ஏர்பஸ் A320 விமானங்களைப் பயன்படுத்தி இரு நாடுகளுக்கிடையில் 14 வாராந்திர விமானங்களை இயக்கும் என அறிவித்திருக்கிறது. இச்சேவையின் துவக்கம் பிராந்தியத்தின் இரண்டு முக்கிய வர்த்தக மற்றும் சுற்றுலா இடங்களை இணைப்பதன் மூலம் துபாய் விமான நிலையத்தின் சர்வதேச இணைப்பை அதிகரிக்கும் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இது அமீரகத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான சமாதானம், உரையாடல் மற்றும் ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான ஒரு பரந்த ஈடுபாட்டின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.