அபுதாபியில் உள்ள மஸ்டார் நகரில் (Masdar City) புதிய கொரோனா தடுப்பூசி மையம் திறப்பு !!
அனைத்து அமீரக குடிமக்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்ற அமீரக அரசாங்கத்தின் முயற்சியின் மத்தியில் அபுதாபியில் உள்ள மஸ்டார் நகரில் (Masdar City) புதிய கொரோனா தடுப்பூசி மையம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மையம் முபதாலா சுகாதார வலையமைப்பின் (Mubadala Health network) ஒரு பகுதியாகும், இது சுகாதார மற்றும் நோய்த்தடுப்பு அமைப்பு (MoHAP) மற்றும் அபுதாபி சுகாதார சேவைகள் நிறுவனம் (SEHA) ஆகியவற்றால் ஆதரிக்கப்படுகிறது.
தடுப்பூசியின் முதல் டோஸ் அமீரக குடிமக்கள், 50 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள், நாள்பட்ட நோய்கள் உள்ள நபர்களுக்கு மஸ்தார் நகரத்தில் உள்ள நடை மையத்தில் (Walk-in Centre) கிடைக்கிறது. மேலும், விரைவாக தடுப்பூசியை எடுக்க விரும்பும் 50 வயதிற்குட்பட்டவர்களுக்கும் இந்த தடுப்பூசி கிடைக்கிறது.
தடுப்பூசி மையம் ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். விதிமுறைகளை பூர்த்தி செய்யும் நபர்களுக்கு முன்பதிவுகள் தேவையில்லை. பார்வையாளர்கள் தங்கள் அமீரக ஐடிகளை (Emirates ID) வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், மேலும் தடுப்பூசி பெறுவதற்கு முன்பு இலவச அல் ஹோஸ்ன் பயன்பாட்டை (Al Hosn App) தங்கள் மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
மஸ்டார் நகரத்தின் நிலையான ரியல் எஸ்டேட்டின் செயல் நிர்வாக இயக்குனர் அப்துல்லா பலாலா கூறுகையில், “ஒரு தடுப்பூசி மையத்தை நடத்துவதன் மூலம் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்திற்கு எங்கள் ஆதரவைத் தொடர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். முபதாலா சுகாதார அமைப்பு தனது தடுப்பூசி மையங்களின் நெட்வொர்க் வழியாக நம்பமுடியாத பணிகளை செய்து வருகிறது. முபதாலா குழுமமாக, நாட்டின் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசிகளை வழங்கும் அமீரகத்தின் தேசிய இலக்கை ஆதரிப்பதில் பெருமைப்படுகிறோம்” என்று அறிவித்தார்.
“சுகாதார மற்றும் பயோடெக் நிறுவனங்கள் உட்பட உலகத் தரம் வாய்ந்த நிலையான தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர்களின் வளர்ந்து வரும் மையமாக மஸ்தார் நகரம் உள்ளது, மேலும் தொற்றுநோயைக் கையாள்வதற்கான அமீரகத்தின் முயற்சிகளை ஊக்குவிக்கும் நிறுவனங்களை பராமரிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்” என்று அவர் மேலும் கூறினார்.