Friday, October 17, 2025
National

கொரோனா தடுப்பூசி போடப்பட்ட குடியிருப்பாளர்கள் மட்டுமே இந்த அரசுத் துறையில் நுழைய முடியும் !

ராஸ் அல் கைமா நகராட்சித் துறையின் வாடிக்கையாளர் சேவை மையத்தைப் (Ras Al Khaimah Municipality Department’s customer service centre) பார்வையிட விரும்பும் குடியிருப்பாளர்கள் கோவிட் -19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட வேண்டும்.

தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்றவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்று மாநில செய்தி நிறுவனம் வாம் (WAM) தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களின் வருகைக்கு குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்பே இரண்டாவது டோஸைப் பெற்றிருக்க வேண்டும்.

பிப்ரவரி 8 திங்கள் முதல் நடைமுறைக்கு வரும் நகராட்சியால் அறிவிக்கப்பட்ட பல கோவிட் பாதுகாப்பு நெறிமுறைகளில் இதுவும் ஒன்றாகும்.

மேலும், வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக முகக்கவசங்களை அணிய வேண்டும், சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும் மற்றும் வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.