Saturday, October 18, 2025
National

உம் அல் குவைனில் கொரோனா PCR பரிசோதனை இலவசம் ! அரசு அறிவிப்பு !!

அமீரகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பல இடங்களில் வாரம் ஒரு முறை PCR பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அமீரகத்தில் PCR பரிசோதனைக்கு அபுதாபி ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் 85 திர்ஹம்ஸ், துபாய் சுகாதார ஆணையம் 150 திர்ஹம்ஸ் பரிசோதனைக் கட்டணமாக வசூலித்து வரும் நிலையில், உம் அல் குவைனில் வசிக்கும் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் கொரோனாவிற்கான PCR பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்படும் என உம் அல்-குவைன் மருத்துவ மாவட்டத்தின் முதன்மை சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

மேலும், PCR பரிசோதனை மேற்கொள்வதற்கு முன்பதிவு எதுவும் தேவையில்லை என்றும் சுகாதாரத் துறையின் அனைத்து மருத்துவ மையங்களிலும் PCR பரிசோதனை இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.