Monday, March 2, 2026
World

சவூதி அரேபியாவில் குழந்தைகள் மதீனா பள்ளிக்குள் நுழையத் தடை ! அரசு அறிவிப்பு !

இந்த ரமலானில்15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மதீனாவில் உள்ள நபிகளின் மசூதி என்றழைக்கப்படும் மஸ்ஜிதுன் நபவி மசூதியில் மற்றும் அதன் முற்றத்தில் நுழைய அனுமதி இல்லை என்று சவுதி அரேபிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அரபு செய்தியின்படி,”ரமலானை முன்னிட்டு நபிகள் மசூதியின் விவகாரங்களுக்கான பொது அதிபரின் அமைச்சகம் (General Presidency for the Affairs of the Prophet’s Mosque), கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க குழந்தைகள் மசூதிக்குள் நுழைவதைத் தடைசெய்துள்ளது” என்று அறிவித்துள்ளது.

தராவீஹ் தொழுகைக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தை பாதியாகக் குறைத்தல், மசூதியை 30 நிமிடங்கள் மூடுதல் மற்றும் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இஹ்திகாஃபை இடைநீக்கம் செய்வது உள்ளிட்ட பிற விதிமுறைகளும் இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸஹர் உணவை ஏற்பாடு செய்வது மற்றும் / அல்லது விநியோகிப்பது அனுமதிக்கப்படாது என்றும், பாக்கெட் செய்யப்பட்ட இப்தார் உணவு மசூதியில் அதிகாரிகளால் விநியோகிக்கப்படும் என்றும் முன்னர் அறிவிக்கப்பட்டது.

வழிபாட்டாளர்கள் மசூதியில் இருந்து வெளியேற தேசிய பார்க்கிங் பயன்பாடான “மவ்கிஃப்” (Mawqif) ஐப் பயன்படுத்த வேண்டும்.

புதன்கிழமை நிலவரப்படி, சவுதி அரேபியாவில் கொரோனா தொற்றுக்கு 5,452 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் 6,676 இறப்புகள் பதிவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.