புத்தாண்டு 2021: சுமார் 33 பட்டாசு வெடிப்பு நிகழ்ச்சியுடன் புத்தாண்டை வரவேற்ற அமீரகம் !
அமீரகத்தில் 2021 வருட புத்தாண்டு மிகச்சிறப்பாக தொடங்கியது. சுமார் 33 வகையான பட்டாசு வெடிப்பு நிகழ்ச்சிகள் விண்ணைத் தொட்டதுபோல் பல வண்ணங்களில் ஒளிரச்செய்தது.
இரண்டு உலக சாதனைகளை முறியடிக்கும் வகையில் அபுதாபியின் அல் வாத்பா (Al Wathba) 35 நிமிட வான வேடிக்கை நிகழ்ச்சியை நடத்தி சாதனை படைத்தது..
துபாயின் புர்ஜ் கலீஃபா, புர்ஜ் அல் அரபு மற்றும் துபாய் பிரேம்; ஷார்ஜாவின் அல் மஜாஸ் வாட்டர்ஃபிரண்ட்; ராஸ் அல் கைமாவின் அல் மர்ஜன் தீவு; அஜ்மானின் கார்னிச்; மற்றும் புஜைராவின் கார்னிச் ஆகியவை பல ஆண்டுகளுக்கு பார்வையாளர்களின் நினைவுகளை ஒளிரச் செய்யும் வகையில் கண்கவர் நிகழ்ச்சிகளை நடத்தியது.



