அமீரகத்தில் தூசுப் புயல் வீசும்..காற்றின் வேகம் மணிக்கு 50 கி.மீ வரை இருக்கும்..வானிலை மையம் எச்சரிக்கை !
அமீரகத்தில் இன்று மார்ச் 21, ஞாயிற்றுக்கிழமை காற்றின் வேகம் மணிக்கு 50 கி.மீ வரை வீசும் என்றும் இதனால் தூசு கலந்த புயல் உருவாகும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) கூற்றின்படி , தூசு கலந்த காற்று வீசுவதால் அது வெளிப்பகுதிகளில் பார்க்கும் திறனைக் (Visibility) குறைக்கும் என்றும் இதற்காக மஞ்சள் நிற எச்சரிக்கை குறியீடு ஒன்று விடுக்கப்பட்டுள்ளதால் குடியிருப்பாளர்கள் வெளியேறும்போது அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை விடுக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் திங்கள் காலை 7 மணி வரை கடுமையான கடல் சீற்றம் காணப்படும் மற்றும் அலை உயரங்கள் ஆறு அடி வரை எழக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், சில நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டமாகவும், மங்கலாகவும் இருக்கும் என்று NCM தெரிவித்துள்ளது.

