Monday, March 2, 2026
National

RAK: வாலிபரிடமிருந்து Dh46,500 பணத்தை மோசடி செய்த இளம்பெண்ணுக்கு சிறை! நீதிமன்றம் தீர்ப்பு!

ராஸ் அல் கைமாவில் (RAK) உள்ள சிறு குற்றத்திற்கான சிவில் நீதிமன்றம், ஒரு வாலிபரிடமிருந்து Dh46,500 பணத்தை ஏமாற்றிய குற்றத்திற்காக இளம் பெண் ஒருவருக்கு இரண்டு மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. பின்னர் அவருக்கு சிவில் நீதிமன்றம் Dh46,500 பணத்தை திருப்பிச் செலுத்த உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற பதிவுகளின்படி, அப்பெண் 51,000 திர்ஹம்ஸை கடனாகப் பெற்றிருந்ததும் சிறிது தொகையை மட்டும் திருப்பிச் செலுத்தியிருப்பதும் தெரிய வந்தது.

மேலும், அந்த வாலிபர் கூறுகையில், “இப்பிரச்சனையை ஒரு இணக்கமான முறையில் முடிக்க நான் பல முறை முயற்சித்தேன். உண்மையில், நாங்கள் ஒரு தீர்வை அடைந்தோம். ஒரு மாத தவணை 1500 திர்ஹம்ஸ் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது” என்று புகார் கூறினார்.

இந்நிலையில், அவர் மூன்று மாதங்களுக்கு மட்டுமே பணம் செலுத்தினார். கடன்பெற்ற 51,000 திர்ஹம்ஸில் 4,500 திர்ஹம்ஸ் மட்டுமே திருப்பி அளித்தார். மீதமுள்ள தொகையான 46,500 திர்ஹம்ஸை தானே வைத்துக்கொண்டு திருப்பிச் செலுத்த அவர் மறுத்துவிட்டார்.

இந்த வழக்கு RAK சிறு குற்றத்திற்கான சிவில் நீதிமன்றத்திற்கு வந்தது. வழக்கில் அப்பெண் குற்றவாளி எனக் கண்டறிந்து மோசடி குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு இரண்டு மாத சிறைத்தண்டனை விதித்தது.

குற்றவாளியின் வசம் இருந்த 46,500 திர்ஹம்ஸை திருப்பிச் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது மட்டுமில்லாமல் நீதிமன்றக் கட்டணங்கள் மற்றும் பிற சட்டச் செலவுகளையும் அவர் செலுத்த உத்தரவிட்டுள்ளது.