Monday, March 2, 2026
BusinessNational

இஸ்ரேலில் அலுவலகம் (Office) திறப்பதற்கு அமீரகத்தின் அல் ஹப்தூர் (Al Habtoor) குழு திட்டம் !

அமீரகம் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க ஆபிரகாம் உடன்படிக்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில நாட்களுக்குப் பிறகு, அல் ஹப்தூர் குழுமமும் (Al Habtoor) இஸ்ரேலின் அம்பா குழுமமும் (Ampa) இஸ்ரேலில் ஒரு பிரதிநிதி அலுவலகத்தை (Representative Office) ஒத்துழைத்து திறக்கும் திட்டங்களை வெளிப்படுத்தியுள்ளது.

துபாயின் அல் வாஸ்ல் (Al Wasl) சாலையில் உள்ள ஏ.எச்.ஜி (AHG) தலைமையகத்தில், அல் ஹப்தூர் குழுமத்தின் (AHG) ஸ்தாபகத் தலைவர் கலஃப் அஹ்மத் அல் ஹப்தூர், அம்பா குழுமத்தின் இணை உரிமையாளர், தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி இஸ்ரேலின் ஷ்லோமி ஃபோகலை வரவேற்றார்.

“நான் இந்த நாளை மிக நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அமீரகவாசிகள் மற்றும் இஸ்ரேலியர்கள் நிறைய விடயங்களில் பொதுவானவர்கள் என்று நான் எப்போதும் நம்புகிறேன். இருவரும் வணிக நோக்குடையவர்கள் மற்றும் தங்கள் நாடுகளின் இயற்கை வளங்களை விட மனித திறமை மற்றும் லட்சியத்தை நம்பி வலுவான, புதுமையான பொருளாதாரங்களை உருவாக்குவார்கள் “என்று அல் ஹப்தூர் கூறினார்.

மேலும், அம்பா குழுமத்துடனான ஒப்பந்தம் குறித்து பேசிய அல் ஹப்தூர், “இந்த ஒப்பந்தம் முன்வைக்கும் வாய்ப்புகள் இரு தரப்பினருக்கும் மிகச் சிறந்தவை. இது புதிய கதவுகளைத் திறந்து வலுவான பொருளாதாரங்களுக்கு வழிவகுக்கும், மக்களிடையே நெருக்கமான கலாச்சார உறவுகளுக்கு வழிவகுக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று கூறினார்.